தமிழக சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத்தாக்களுக்கு இன்று கடைசி நாள் ..

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.

வேட்பு மனுத்தாக்கள் செய்யும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் விவரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.வேட்புமனுக்கான பரிசீலனை முடிந்தவுடன் ,தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பாத பட்சத்தில் ,தங்களது மனுவை வருகிற 22-ந்தேதி மதியம் 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 51 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல் ஆகிய 2 தொகுதிகளில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Next Post

கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் இந்தியா : இன்று புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று..

Fri Mar 19 , 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.23 கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோன தொற்றால் 25,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் […]
corona-virus-affected-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய