ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து போராடும் ஸ்புட்னிக் தடுப்பூசி..

ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உருமாறிய புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.உருமாற்றம் அடைந்த புதிய ‘ஒமிக்ரான்’ (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற பிறழ்வுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதால், ஓமிக்ரானை தடுக்கும் என கமலேயா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது . பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் பூஸ்டர்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Next Post

ஒமிக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?

Wed Dec 1 , 2021
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. மேலும் இந்த வைரஸானது தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஓமிக்ரான் , ஏற்கெனவே கொரோனா […]
Omicron-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய