இந்தியாவில் புதிதாக 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,96,776 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 267 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,69,247 ஆக அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,997, கேரளாவில் 40,132 பேர் அடங்குவர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,28,506 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,023 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது கடந்த 547 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 124 கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 80,98,716 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Next Post

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு..

Wed Dec 1 , 2021
அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு […]
polytechnic-lecturer-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய