ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி : தமிழகத்தில் 12 ஆய்வகங்களில் அறிமுகம்..

புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க கொரோனா ரகமான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது .இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை இந்த வைரஸ் குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமிக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ithanpadi பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகங்களில் முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு, மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Post

டெல்டாவை விட 6 மடங்கு பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் ..

Mon Nov 29 , 2021
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட 6 மடங்கு மற்றவர்களுக்கு பரவும் திறன் கொண்டது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒமைக்ரான் வைரஸானது நோய் எதிர்ப்பாற்றலை தாண்டிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகவும், தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஒமைக்ரான் தொற்றுப் பரவிய நோயாளிகளுக்கு, மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அல்லது காக்டெய்ல் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா […]
Omicron-SARS-COV-2
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய