மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது […]

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டு அறிவித்த பத்ம விருதுகளின்படி, ஜப்பான் பிரதமர் […]

பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணை ,ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால […]

விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா தற்போது பெற்றுள்ளார். விண்வெளிக்கு ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார் ,இது இந்தியாவிற்கு பெரும் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளது. விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் […]

கர்ப்பிணிப்பெண்களின் நலனுக்காக வாட்ஸ் ஆப் உதவி எண்ணை (9354954224) தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதரவும் ,உதவியும் கிடைக்கப்ப் பெறுகிறது . இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைக்காக தேசிய பெண்கள் ஆணையம் 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை […]

மே 4 ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸர்ஸ் தளம் மூடப்படும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் அதிலுள்ள விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ ஆன்ஸர்ஸ் தளமானது 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.சுமார் 16 ஆண்டுகாலமாக இயங்கி வரும் யாஹூ ஆன்ஸர்ஸ்ஸின் அனைத்து பக்கங்களும் தற்போது மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ ஆன்ஸர்ஸ் இணையதளம் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் படிக்கும் தளமாக மாற்றப்படும் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் […]

கொரோனா தொற்றின் காரணமாக மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வருமானவரி தொடர்பான வழக்குகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க மார்ச் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விவாத் சே விஷ்வாஸ் (Vivad se Vishwas) திட்டமானது வருமான வரி தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ‘விவாத் சே விஷ்வாஸ்’ […]

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது ௧௨.௪௩ கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,86,796 […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய