
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மேலும், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு 4,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.மேலும், 2,700 கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,84 மனுக்கள் ஏற்கப்பட்டன,13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இதேபோல்,அரவக்குறிச்சி தொகுதியில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதில்,7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு,40 மனுக்கள் ஏற்கப்பட்டன.மேலும் ,காங்கேயத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ,50 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து,தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலையும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி இன்று வெளியிட்டார்.இதன்படி,தமிழகத்தில் மொத்தம் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.