அம்மா உணவகத்தை சேதப்படுத்திய கட்சி நிர்வாகிகள் நீக்கம் – ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை முகப்பேறு மேற்கு ஜெ ஜெ நகர் பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் புகுந்த தி மு க வினர் அங்கு உள்ள பெயர் பலகையை உடைத்து சூறையாடினர்.

அ.தி.மு.க போராட்டம்:

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக அங்கு கூடிய அ தி மு க வினர் அம்மா உணவகத்தை சூறையாடிய தி மு க வினரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம் மற்றும் கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்

TTV தினகரன் கண்டனம்:

இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தை திமுக வினர் அடித்து நொறுக்கி சூறையாடிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. புரட்சிதலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் உணவகத்தில் திமுக வினர் இப்படி நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுக வினர் அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார்களோ என்கிற கவலை இந்த காணொளியை காணும்போது ஏற்படுகிறது. திமுக வினர் ஒரு போதும் திருந்தமாட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் அமைந்து இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சட்ட ரீதியாக நடவடிக்கை:

இந்நிலையில் தி மு க சட்ட மன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில வைக்கவும், அவ்விருவரை கழகத்தில் இருந்து நீக்கவும் கழக தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று..

Wed May 5 , 2021
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.49 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் […]
corona-virus-infection-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய