10, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லை : பொதுத்தேர்வு நடத்தப்படும் – பள்ளி கல்வித்துறை திட்டவட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.மேலும் நடுநிலைப்பள்ளி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

நவம்பர் 1-ந்தேதி பள்ளிகள் தொடங்கப்பட்டால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், “மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை.மேலும் பொதுத்தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதம் ஒரு தேர்வு நடத்தப்படும்.இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நவம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

Next Post

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி : வல்லுநர் குழு பரிந்துரை..

Tue Oct 12 , 2021
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் 18 வயது கீழ் உள்ளவரக்ளுக்கு இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறப்பு வல்லுநர் […]
covaxin-vaccine-for-child
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய