அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு ..

  • அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
  • மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது, உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
  • 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
  • அண்ணா மேலாண்மை நிலையத்தின் காட்சி ஊடகப்பாதை செயல் பாட்டினை மேம்படுத்தும்வ கையில் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் பிரத்யேகமாக ஒரு படப்பிடிப்புத்தளம் அமைக்கப்படும். மற்றும் அதற்கான அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : அட்டவணை வெளியீடு ..

Mon Sep 13 , 2021
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக,ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளில் […]
Tamilnadu-rural-elections-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய