தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : அட்டவணை வெளியீடு ..

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக,ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – 15.09.2021
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் – 22.09.2021
வேட்பு மனு பரிசீலனை – 23.09.2021
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் – 25.09.2021
முதற்கட்ட தேர்தல் – 06.10.2021
2ஆம் கட்ட தேர்தல் – 09.10.2021
வாக்கு எண்ணிக்கை – 12.10.2021

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Sep 13 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,522 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 22 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 204 பேருக்கும்,சென்னையில் 185 […]
district-wise-corona-updates-13-09-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய