
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார் .
தமிழகத்தின் துணை முதல்வரும் ,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது 11 -வது பட்ஜெட்டை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு:
முக்கிய அம்சங்கள் :
*பள்ளி மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
*மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ரைட்ஸ் என்ற புதிய சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.இதன் மூலம் 71 ,766 பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
*11 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1650 மாணவர் சேர்க்கை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இடைக்கால பட்ஜெட்டில் அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு :
*தமிழக அரசு சார்பில், கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகளை உருவாக்க ரூ .1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மதிய உணவு திட்டத்துக்கு ரூ.1953 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ .200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
*11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470.93 கோடி நிதி ஒதுக்கீடு.
*சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
*சமூக நலத்துறைக்கு ரூ .1953 கோடி நிதி ஒதுக்கீடு.
*நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*போக்குவரத்து துறைக்கு 3,717.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு 1450 கோடி நிதி ஒதுக்கீடு.
*காவல் துறைக்கு வரும் ஆண்டில் ரூ .9567 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மின் துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு.
*இடைக்கால பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ .5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .
*விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,738 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மீன் வளத்துறைக்கு ரூ .580.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*தீயணைப்பு துறைக்கு ரூ.436.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*உயர் கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மாநில அரசின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ .3,548 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*தமிழக ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ .22,218 கோடி ஒதுக்கீடு.
*அம்மா சிறு மருத்துமனைகளுக்கு ரூ .144 கோடி ஒதுக்கீடு.
*மின் கட்டண மானியங்களுக்கு ரூ .8,834 கோடி நிதி ஒதுக்கீடு.
*பழங்குடியின துணைத் திட்டங்களுக்கு ரூ .1,276 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ .229 கோடி நிதி ஒதுக்கீடு.
*கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ .1,224 கோடி நிதி ஒதுக்கீடு.
*சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ .3,410 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*நீதித் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ .1,437 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.19,420.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
*தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ .300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிதி தேவைக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .