
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு துறைக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கிற ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்வானது, பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாகும்.இந்தத் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடப்பாண்டில் பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடைபெற்றது.
ஜேஇஇ மெயின் தேர்வை,ஒரு மாணவா் 4 முறையும் எழுதலாம்.எனினும் அவற்றில் அவர் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத் தேர்வைத் தொடா்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் தோ்வுகள்(2021) நடைபெறும்.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு மே 24 முதல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் ,மீண்டும் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக ஜேஇஇ மெயின் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.