
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக
சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால் (அதாவது பிறை முன்கூட்டியே அல்லது மறுநாள் தெரியும் நிலையில்) அன்றைய நாட்களில் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு சு .வெங்கடேசன் எம்.பி அவர்கள் மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . இவரின் கோரிக்கையை பரிசீலித்து , மே 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகள் மாற்றி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும் ,10 மற்றும் 12 வகுப்புகளுக்கான புதிய அட்டவணையும் சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது .