அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு – TNPSC அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான துறைத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.,வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில்,

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, ஜூன் 22 முதல் 30 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் மே 28க்குள், ஆன்லைன் வழியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வுகள் காலை 9:30 முதல் 12:00 மணி வரையிலும், பிற்பகல் 2:30 முதல் 5:00 மணி வரையிலும்,என இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் கணினி வழியிலும், எழுத்து தேர்வாகவும் நடத்தப்படும். மேலும், புத்தகங்களை பார்த்து எழுதுவது மற்றும் மனப்பாடம் செய்து எழுதுவது என்ற, இரண்டு முறைகளும் கையாளப்படும். துறைத் தேர்வுகள் பற்றிய முழு விவரங்களைப் பெற Tnpsc இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

Next Post

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை தெரிந்துகொள்ள?

Mon May 3 , 2021
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது.இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய முழு விவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பெற கீழ்வரும் […]
TN-election-votes-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய