இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா பாதிப்பு..

corona-virus-india

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது.நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.34 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,29,3003 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,959 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 34,13,642 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 15,71,98,207 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சதவிகிதம் - 2021

Mon May 3 , 2021
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இதில் களமிறங்கின. சட்டமன்ற வாக்குப்பதிவு முடிந்த நிலையில்,சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை (நேற்று) காலை 8 மணியளவில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தி.மு.க தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை திமுகவும் 33.28 சதவீத […]
TN-political-vote-percentage-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய