இந்தியாவில் ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது 3 வது நாளாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.41 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,13,292 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,408 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 34,47,133 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - 234 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் - ஓர் தொகுப்பு

Tue May 4 , 2021
தமிழகத்தில் 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைந்தது.இதன் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட […]
TN-elections-234-candidates-won-list-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய