
தமிழ்நாடு மின்னாளுமையால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 13.02 .2021 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்களது குறைகளை நேரடியாக அரசுக்கு தெரிவித்து மற்றும் அதற்கான தீர்வை விரைந்து காணும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒன்றை 12 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் நிறுவியுள்ளார் .
முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தின் மூலம் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாக தங்கள் குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது .முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் 100 இருக்கைகளுடன் சென்னை ,சோழிங்கநல்லூரில் உள்ள ராஜிவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது .
பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணி நேரமும் தெரிவிக்க CMHelpline.tnega.org என்ற இணையத்தளம் வாயிலாகவும் ,cmhelpline@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் ,மேலும் CMHelpline Citizen என்ற கைப்பேசி வாயிலாகவும் மற்றும் தங்கள் குறைகளை https://www.facebook.com/CM-Helpline-TN என்ற பேஸ்புக் வாயிலாகவும் தெரிவிக்கலாம் .