
தமிழக சட்டப்பேரவை தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தமிழகத்தில் நடைபெறும் 16 வது சட்டப்பேரவைத் தேர்தலாகும். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நாடாளுமன்றத்தைப் போன்று மேலவை ,கீழவை என இரு அவைகளை கொண்டு செயல்பட்டு வந்ததது.
1986-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மேலவையை கலைத்து உத்தரவிட்டார்.இதன்படி இன்று வரை ஓர் அவை மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் இன்று வரை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை தமிழகம் கண்ட முதல்வர்களும் ,அவர்களின் பதவிக்காலமும் பற்றி விரிவாக காண்போம்.
