
கர்ப்பிணிப்பெண்களின் நலனுக்காக வாட்ஸ் ஆப் உதவி எண்ணை (9354954224) தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதரவும் ,உதவியும் கிடைக்கப்ப் பெறுகிறது .
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைக்காக தேசிய பெண்கள் ஆணையம் 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது .
இதன்படி,தொடர்ந்து 24 மணி நேரமும் கர்ப்பிணிகளின் அவசரத் தேவைக்காக 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஹெல்ப்பட்னயூ@ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.