
இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர்களின் பயன்பாட்டிற்க்காக பல்வேறு செயலியை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் ஒன்றாக “VOTER HELPLINE ” செயலியும் குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை வாக்களிக்க வேண்டுமானால்,அவர்களின் பெயரானது, இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.பொதுவாக, நாம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டுமென்றாலோ அல்லது திருத்தும் செய்ய முற்பட்டாலோ, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று திருத்தும் செய்ய வேண்டும்.
பின்னர்,வாக்காளரின் தேவைக்காக ஆன்லைன் மூலமாகவும்,இ-சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மற்றும் திருத்தும் செய்ய வழிகள் கொண்டு வரப்பட்டன.இதனை மேலும் எளிமையாக்க இந்திய தேர்தல் ஆணையம் “VOTER HELPLINE ” என்ற ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்மூலம் வாக்காளர்கள், வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்யும் பணியினை தங்களது ஸ்மார்ட்போன் மூலமாக எளிதில் முடித்து விடலாம்.
“VOTER HELPLINE ” சேவையின் பயன்பாடுகள் :
*வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயரை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. (Form6)
*வாக்களர் பட்டியலில் தங்கள்து பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்ய EPIC எண்னை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் அல்லது ஆதார் பார்க்கோடை (Barcode) பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
*வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்க முடியும்.
*வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யமுடியும் (Form 8).
*வாக்காளரின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*இந்த செயலியின் மூலம் வாக்காளர்கள் புகார்களைப் பதிவு செய்யவும், புகாரின் நிலையைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.
*மாற்று வாக்காளர்கள் அடையாள அட்டையை (Duplicate Card) பெற்றுக்கொள்ளலாம் (Form 001).
*இடமாற்றத்தின் காரணமாக வாக்குச் சாவடியை மாற்றம் செய்துகொள்ளலாம் (Form 8A).
வாக்காளர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வசதிகளை செய்து கொள்ளலாம்.
இதுவரை நாட்டில் 1.9 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போனில் “VOTER HELPLINE ” செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.