
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .மேலும் ,தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா குமார் மற்றும் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .
தமிழகம் ,புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது .5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்கலாமானது மே 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ,சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ,தமிழத்தில் மொத்தம் 88,936 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .