
தமிழ்நாட்டில் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(டிச.28) சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கிறார் .மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான அரசாணையானது கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது .இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க சிறப்பு அலுவலராக ரா.லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா ஆகியோர் நியமிக்கப்பட்டு ,எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
மயிலாடுதுறை தனி மாவட்டமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார் .நாகை மாவட்டத்திலிருந்து பிரிந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை ,தனி மாவட்டமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது .இதன்மூலம் மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவு நிறைவேறியுள்ளது .
மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரித்த நிலையில் ,மயிலாடுதுறை மாயூரநாதர் தெற்கு வீதியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க திட்டமிடப்பட்டு ,அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது .
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் :
மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்த நிலையில் ,மாவட்ட ஆட்சியரகம் மற்றும் நிரந்தர நிர்வாக கட்டிடங்கள் அமைக்க மனப்பந்தலை அடுத்த பால்பண்ணை பகுதியில் உள்ள தருமபுரம் ஆதினம் 27 வது குருமகா ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமசாரிய ஸ்வாமிகள் நிலம் வழங்கியுள்ளார் .அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கைகளை ஏற்று தருமபுரம் ஆதினமானது நிலம் வழங்கியுள்ளது .