முக்கிய கட்டுப்பாடுகளுடன் நவம்பர் 16 முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதி – கேரள அரசு ஒப்புதல்

கேரள அரசு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோன முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளுடன் ,சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது …

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் ,எனவே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ,ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும் அனுமதி அளிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது .

வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது .ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக எருமேலி மற்றும் பம்பை சுற்று பகுதிகளில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார் .கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .இரவு நேரத்தில் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .மற்றும் பக்தர்களுக்கு நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது .

கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்,60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

Next Post

யுபிஎஸ்சி எதிர்ப்பு : மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை ஒத்திவைக்க இயலாது

Tue Sep 29 , 2020
குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்நிலையில் மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்க இயலாது என மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .திட்டமிட்ட படி தேர்வுகள் அக்டோபர் 4 அன்று நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று இருப்பதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது . குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிரெட்டி கோவர்த்தன சாய் […]
UPSC-exam-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய