
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் என தெரிவித்துள்ளார் .அவர் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியயை கொண்டு வந்து ,பின்னர் அரசியலுக்கு வருவேன் என முன்பே அறிவித்திருந்தார்.டிசம்பர் 31 ,2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவேன் என முன்பு அறிவித்திருந்தார் ,அந்த அறிவிப்பு இந்த டிசம்பர் 31 ல் நிறைவேறும் எனவும் தெரிவித்தார் .இந்த அறிவிப்பு ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது ,நீண்ட காலம் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியானது .
ஜனவரியில் புதிய கட்சி : ரஜினி
ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார் ,அதற்கான தேதியை டிசம்பர் 31 ல் அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.மக்களின் பேராதரவோடு 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்தார் .தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி ஆகும் ,தோல்வியுற்றால் அது மக்களுடைய தோல்வி என்று கூறினார்.
தமிழகத்தில் நேர்மையான ,நாணயமான ,வெளிப்படையான ,ஊழலற்ற ,சாதி மத அற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என தெரிவித்தார் .தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் 40 % படப்பிடிப்பை முடித்துக்கொடுப்பது எனது கடமையாகும் ,பின்னர் முழு நேர ஆன்மிக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக சேவையை ஆற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறுகையில் ,கொரோனா தொற்று தன்னை பாதிக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்திருந்தனர் .ஆனால் தனது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தனக்கு அறிவுறுத்தியதால் மக்களை நேரில் சந்திக்கமுடியாமல் போனது .மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் உயிருக்கே ஆபத்து இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்தனர் .ஆனால் தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் அதைவிட சந்தோஷப்படுபவன் நானாக இருப்பேன் என கூறினார்.தமிழக அரசியலில் “மாத்துவோம் அனைத்தையும் மாத்துவோம் ,இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற சூளுரையை ரஜினிகாந்த் முன்மொழிந்தார் .
கடந்த நாட்களில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ,மாவட்ட நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை நடத்திய ரஜினி ,அரசியல் நிலைப்பாடு குறித்து விவாய்வில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .