பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேர்தலுக்கு பிறகு நடத்த முடிவு : பள்ளிக்கல்வித் துறை ..

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடைபெற இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது .இதனிடையில் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பிளஸ் 2 பொதுத் தேர்வும் தொடங்கிவிடுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்த பிறகு ,பிளஸ் 2 பொதுதேர்வானது மே 3 தொடங்கிவிடும் ,இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது . எனவே, மாணவர்களுக்கு தொடர்ந்து பாடங்களை நடத்தி முடிக்கவும், மேலும் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த பல திருப்புதல் தேர்வுகளை நடத்தவும், ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .

Next Post

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : சட்டமன்ற தேர்தல் 2021..

Fri Mar 12 , 2021
2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது .இதற்கான வேட்புமனுத்தாக்கள் இன்று முதல் தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது .இதில் அதிமுக வின் முழு வேட்பாளர்கள் பட்டியலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.ஆனால் திமுக, தொகுதி எண்ணிக்கை முடிவு செய்வதிலும், […]
dmk-candidate-list-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய