
இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.மேலும் மத்திய அரசு கடன் மோசடிகளை தவிர்ப்பதற்கும்,வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டுள்ளது.
இதன்படி, தொடக்க நிலையில் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு மார்ச் 31,2020 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.அதே சமயத்தில் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக பான் கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.மேலும், கொரோனாவின் தாக்கமானது இந்த ஆண்டு தொடக்கம் வரை நீடித்தது.
இறுதியாக,தற்போது பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 ,2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக சென்று அதற்கான பணியை மேற்கொள்ளுதல் நல்லது.மேலும் ,தவறும் பட்சத்தில் ஆதார் கார்டு இணைக்கப்படாத பான் கார்டுகள் வருமானவரித்துறையால் செயலிழக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.