
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக தற்போது பரவி வருகிறது.இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையில், சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங்க் தாமங் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க வியாழக்கிழமை இரவு முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பொது முடக்கமானது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனவும் ,அந்நேரங்களில் உணவகங்கள் ,மதுபான கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் ,தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.