புதிய கல்வி திட்டங்கள் : மே மாதத்தில் அறிவிப்பு ..

மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கைப்படி, பல்வேறு புதிய திட்டங்களை, மே மாதத்தில் அறிவிக்க உள்ளது. இந்த புதிய திட்டங்கள் அரசு துறைகளின் அனுமதிக்காக தற்போது பரிசீலனையில் உள்ளன. பரிசீலனை நிறைவடைந்து ,அனுமதி பெற்ற பிறகு, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .மேலும் இந்த திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது .

கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை செய்யும் நோக்கில்,மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதற்கு, 2020 ஆம் ஆண்டு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதளும் அளித்துள்ளது .

இந்த திட்டமானது கல்லூரியில் சேர்வதில் உள்ள சிரமங்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும் .இதன்மூலம் அனைத்துக் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர, பொது நுழைவுத் தேர்வானது நடத்தப்படும்.

தற்போது நடைமுறையில்,கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையானது பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆனால்,புதிய திட்டத்தின் படி கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

புதிய கல்வி கொள்கைப் படி, ஒரு மாணவர் கல்லுாரியில் சேர்ந்த முதல் ஆண்டிலே வெளியேறினால், அவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இரண்டாவது ஆண்டு படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டால், அவருக்கு பட்டயச் சான்றிதழானது வழங்கப்படும் .மேலும், மூன்றாண்டு படிப்பை முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.இறுதியில், நான்காண்டு படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சியுடன் கூடிய பட்டம் வழங்கப்படும். இதுபோன்ற பட்டயம் மற்றும் பட்டங்கள் வழங்க, ஒரு மாணவர், தன் கல்வி காலத்தில் சேமிக்கும் ஊக்கப் புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதிய கல்வி கொள்கை திட்டத்திற்கு அடுத்து, கல்வி ஊக்கப் புள்ளிகள் வங்கி என்ற திட்டம், அரசின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில், மாணவர்கள், ஒரு பாடத் திட்டத்தில் ஈட்டும் ஊக்கப் புள்ளிகளை, சேமித்து, தங்களுக்கு உரிய வேறு பாட திட்டத்தை உருவாக்க பயன்படுத்தலாம்.மேலும், இந்த புதிய திட்டமானது அரசின் பரிசீலனைக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Next Post

Google Doodle-ல் இடம்பெற்ற இந்திய விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ்..

Wed Mar 10 , 2021
இந்தியாவின் மூத்த விஞ்ஞானியான உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்களின் 89 வது பிறந்த தினம் இன்று ,இதனை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது. கூகுள் நிறுவனம் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதையை செலுத்தி வருகிறது . இஸ்ரோவின் முன்னாள் தலைவரான […]
udupi-ramachandra-rao-google-doodle
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய