
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ,கல்வி ‘டிவி’யில், பாட வகுப்புகளை அதிகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.பின்னர் பத்து மாதங்கள் கழித்து கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது.இதனைத் தொடர்ந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 12 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.மேலும் மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.இதனிடையில் கொரோனா தொற்றானது மீண்டும் பரவ தொடங்கியது.இதனால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, ‘டிவி’ வழியாக, மீதி உள்ள பாடங்களை நடத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி தொலைக்காட்சி வழியாக பாட வகுப்புகளை அதிகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.