
Koo ஆப் என்பது இந்தியர்கள் தங்கள் கருத்துக்களை தங்கள் தாய்மொழியில் பகிர்ந்து கொள்வதற்கும் ,அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும்.இதில் பயனாளர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் ,பரிமாறிக் கொள்ளவும் இது ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது.
மேலும் ,பயனாளர்கள் தங்களது கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான எண்ணங்களுடன் பயணிப்பதற்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் .
KOO ஆப் -ன் பயன்பாடுகள் :
1 .கருத்து பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துதல் .
2 . சிறந்த மற்றும் சுவாரஸ்யமான நபர்களை பின்தொடர்தல்..
3 .சிறந்த தலைப்புகளை பற்றி விவாதித்தல்
4 .பல இந்திய மொழிகளில் உரையை எழுதுதல் மற்றும் விருப்பத்தை பகிர்ந்துகொள்ளுதல் ..