
நாடு முழுவதும் ஜேஇஇ (JEE – Joint Entrance Examination) முதன்மை தேர்வுகள் பிப்- 23ம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
சமீபத்தில் ஜேஇஇ (JEE) முதன்மை தேர்விற்கான உத்தேச விடையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் ஏதேனும் கருத்துகள் அல்லது பிழை இருந்தால் அதனை முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது .
கடந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்களை விட இந்தாண்டு சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஏப்ரல், மே மாத அமர்வுகளைப் பொறுத்து உண்மையான கட்-ஆஃப் மதிப்பெண் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஜேஇஇ (JEE) முதன்மை தேர்வு முடிவுகளை அறிய nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.