
ஜெயம் ரவியின் 25 வது படமான பூமி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது .ஜெயம் ரவியின் பூமி படமானது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜனவரி 14 அன்று பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது .இந்நிலையில் அத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் ,அடங்க மறு, கோமாளி போன்ற படங்கள் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன .எனவே பூமி படமானது பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது .இயக்குனர் லக்ஷ்மண் உடன் மீண்டும் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி .இயக்குனர் லக்ஷ்மண் – ஜெயம் ரவி கூட்டணியானது பல வெற்றி படங்களை கொடுத்துள்ளது .எனினும் இத்திரைப்படமும் மிக பெரும் வெற்றியை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது .ரோமியோ ஜூலியட் ,போகன் ,கோமாளி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் லக்ஷ்மண் .
ஜெயம் ரவியின் பூமி படமானது கொரோன தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது .மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிட்ட பூமி படமானது தற்போது ஜனவரி 14 இல் ஓடிடி தளத்தில் வெளியாகுவது குறிப்பிடத்தக்கது .