விண்ணில் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட் : கவுண்டவுனை தொடங்கியது இஸ்ரோ !!

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட் ஆனது நாளை (நவம்பர் 7 ஆம் தேதி ) விண்ணில் செலுத்தப்படவுள்ளது .இந்நிலையில் பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட்டின் 26 மணிநேர கவுண்டவுனை இஸ்ரோ வெள்ளிக்கிழமை தொடங்கியது .

நடப்பாண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) எந்த ஒரு விண்கலத்தையும் விண்வெளிக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கு முக்கிய காரணமாக உலகையே அச்சுறுத்திய கொடிய நோயான கொரோனா ஆகும் .

இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 51 வது ராக்கெட்டாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது .இந்த .பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட்டுடன் இஓஎஸ் – 01 என்ற கண்காணிப்பு செயற்கைக்கோளுடனும் ,உடன் 9 வெளிநாட்டு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி – சி 49 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படவுள்ளது .

பி.எஸ்.எல்.வி – சி 49 உடன் சிந்தடிக் அபர்சர் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது . சிந்தடிக் அபர்சர் ரேடார் ஆனது எந்தஒரு தட்பவெப்ப காலநிலைகளிலும் துல்லியமாக படம் எடுக்கும் தன்மை கொண்டது .இந்த தொழில்நுட்பத்தை பி.எஸ்.எல்.வி – சி 49 உடன் இணைத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் .

Next Post

விரைவில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் - தீபாவளிக்கு வெளியீடு !! நடிகர் சிம்பு அறிவிப்பு !

Fri Nov 6 , 2020
இயக்குனர் சுசீந்திரன் படைப்பில், சிம்புவின் அதிரடி நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார் .சிம்புவின் வந்த ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படமானது கடந்த ஆண்டு வெளியானது . இத்திரைப்படத்தை தொடர்ந்த தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் சுசீந்திரனுடன் கைக்கோர்த்தார் நடிகர் சிம்பு .சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமானது பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ஆனது தீபாவளிக்கு வெளியாகும் என […]
eswaran-movie-teesar-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய