
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.23 கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோன தொற்றால் 25,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,83,679 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,370 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 2,71,282 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 3,93,39,817 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.