
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது .
அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் , மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது .மேலும் , தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு, அரசு பணிகளில் சேர 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதற்கான சட்டம், ஏற்கனவே அமலில் இருந்த நிலையில், மாணவர்கள் பட்டப் படிப்பை மட்டும், தமிழில் படித்தால் போதாது என்றும் ,ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் எனவும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் தங்களது படிப்பை தமிழ் வழியில் படிக்கத் தொடங்கியுள்ளனர் .இதனால் பெற்றோர்களும் தமிழ் வழியில் தங்களது பிள்ளைகளை சேர ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர் .