அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை தடை – தமிழகஅரசு அறிவிப்பு..

தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக்குழு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இதில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட அறிக்கையில்..

  • ஒரு சில மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.
  • திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
  • பொதுப்போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
  • பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.
  • கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..

Mon Sep 13 , 2021
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து தேர்வு எண்மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை […]
plus-2-exam-results-announced-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய