இணைய வழியில் பொருட்களை வாங்கும் செயலிகளுக்குத் தடை : கூகுள் நிறுவனம் அறிவிப்பு

ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்களை வாங்கும் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது,இணையவழியில் அனைத்து பொருட்களையும் வாங்கும் நிலையானது அதிகரித்து வருகிறது.வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஷாப்பிங் செயலியை செயல்படுத்தி வருகிறது.இந்த செயலியின் மூலம் மளிகை பொருட்கள் முதல் மின்னணுப் பொருட்கள் வரை இணைய வழியில் பெற்று கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இணைய வழியில் பொருட்களை வாங்கும் செயலிகளுக்குத் தடை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு இயங்குதளங்களில் உள்ள ஷாப்பிங் செயலியானது ஜூன் மாதம் முதல் நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தங்களது இணையத்திலேயே வாங்கும் வகையில் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.மேலும்,ஷாப்பிங் டேப் என்ற முறை மேம்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது மின்னஞ்சல் முகவரியை கொண்டு வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா : புதிதாக 1,61,736 பேருக்கு தொற்று உறுதி

Tue Apr 13 , 2021
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
covid-test-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய