கொரோனா வைரஸ்- கோவிட் -19

கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் .அதன் பிடியில் இருந்து தம்மை தற்காத்து கொள்வது எப்படி ?
கொடிய கோரோனோவின் தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாத்து கொள்வது எப்படி ?

*உலக சுகாதார நிறுவனமும் ,சுகாதாரத்துறை அமைப்புகளும் மற்றும் நிபுணர்களும் ,மருத்துவர்களும் மக்களை பெரும் விழிப்புணர்வோடும் ,பாதுகாப்போடும் இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள் .


*உலக நாடுகளான சீனா ,அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளை பெரும் வல்லாண்மையோடு கொரோனா ஆட்சி செய்து வருகிறது .கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களாலாகிய நாம் அனைவரும் அரசின் நிபந்தனைகளையும் ,அறிவுறுத்தல்களையும் ஏற்று நாம் அனைவரும் உடலால் வேறுபட்டு உள்ளதால் ஒன்றிணைந்து கொரோனோவை முற்றிலுமாக ஒழித்துடுவோம் .

கொரோனா வைரஸ்

*உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா ஒரு நுண் உயிரி, உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கொரோனா வைரஸ் பாதித்தால் சாதாரண சளி முதல் சார்ஸ், மெர்ஸ், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பு ஏற்படும்.

*சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற் கப்படும் இடத்தில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரி டப்பட்டது.

*தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய தொற்றுக்கு COVID-19 என பெயரிடப்பட்டுள்ளது .இது மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் சிவியர் அக்யூட் ரெஸ்பிரட்டரி சிண்ட்ரோம் கொரோனா 2 அல்லது Sars-coV-2 என பெயரிடப்பட்டுள்ளது.

*சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று 2002 ல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது.

Next Post

சீவக சிந்தாமணி

Tue Sep 8 , 2020
சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவக சிந்தாமணி .இந்நூல் திருத்தக்கத்தேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய