
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டத்தில் முன்னதாகவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது,தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும், மேலும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் மற்றும் திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 14 சுகாதாரக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் மூலம் 439 பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.