இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 27,254 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,874 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,47,032 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,687 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,74,269 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 74,38,37,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு ..

Mon Sep 13 , 2021
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் தாமதமானால் […]
Tamilnadu-Assembly-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய