இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி ..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,832 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 30,84,814 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 15,00,20,648 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு வாட்ஸ் ஆப் உதவி எண் : தேசிய பெண்கள் ஆணையம் அறிவிப்பு ..

Thu Apr 29 , 2021
கர்ப்பிணிப்பெண்களின் நலனுக்காக வாட்ஸ் ஆப் உதவி எண்ணை (9354954224) தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதரவும் ,உதவியும் கிடைக்கப்ப் பெறுகிறது . இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைக்காக தேசிய பெண்கள் ஆணையம் 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை […]
NCW-pregnant-emergency-number
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய