இந்தியாவில் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,05,160 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,441 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 3,68,457 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 5,08,41,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டி : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

Wed Mar 24 , 2021
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மேலும், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு 4,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.மேலும், 2,700 கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,84 மனுக்கள் ஏற்கப்பட்டன,13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இதேபோல்,அரவக்குறிச்சி தொகுதியில் […]
tamilnadu-election-commisioner
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய