நாடு முழுவதும் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை..

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது .தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.07 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியா நாடு முழுவதும் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,09,831 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,27,543 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,856 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 2,23,432 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 3,29,47,432 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

யார் யார் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்?

Tue Mar 16 , 2021
இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் . தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் . இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை […]
vote-by-mail
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய