
சந்திராயன் -3 என்ற விண்கலமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் – 3 விண்கலமானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ,இதன் மூலம் இந்தியாவின் திறமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் கூறினார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலமானது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் -2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது .ரோவர் வாகனத்துடன் இணைந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் விண்கலம் ,நிலவின் பரப்பில் திட்டமிடத்தைவிட வேகமாக இறங்கி அதன் இணைப்பை துண்டித்தது.இதனால் நிலவில் ஆய்வு செய்யும் முதல் நாடான கனவை இந்தியா இழந்தது .
இதன் தொடர்ச்சியாக தற்போது சந்திராயன் -3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட உள்ளது .இதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார் .மேலும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் ,வரும் டிசம்பர் மாதம் ‘ககன்யான் ‘ திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .