பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அமைத்தது.இந்த குழுவிற்கு கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதிய பாடத்திட்ட குழு தலைவரான கஸ்தூரிரங்கன் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாடத் திட்டக்குழுவில் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக நிறுவனத்தின் வேந்தா் மகேஷ் சந்திர பந்த், ஜாமியா மில்லியா […]
கல்வி
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 17-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எந்தெந்த மாணவர்கள்? எந்தெந்த தேதியில்? ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த அட்டவணையும், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாக […]
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செப். 22,23,24,27,28 ஆகிய 5 நாட்கள் 5ஆம் கட்ட எளிய கணினி பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 அன்று பயிற்சிக்கான பள்ளியினை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , மற்றும் Hi – Tech Lab ஆகியவற்றில் திறன் […]
ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தொழில்நுட்பத் தேர்வுகளான தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் போன்ற தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்ததுடன் அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தொழிநுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் 3500க்கு […]
தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 11 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 11 ஆயிரம் பேருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பித்த அரசு […]
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 6 முதல் […]
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 334 நகரங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9.34 லட்சம் பேர் தேர்வெழுதினர். ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. […]
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் […]
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு […]
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் தாமதமானால் […]