
2021 நவம்பர் -ல் நடைபெறும் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு தனித் தேர்வினை அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (சர்வீஸ் சென்டர்) ஆன்லைன் மூலமாக 08.11.2021 அன்று விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.