
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் .தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார் .
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் ,தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 % இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது .இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டது .
தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது ,ஆளுநர் மாளிகையில் 8 மாத காலமாக நிலுவையில் வைக்கப்பட்டது .பின்னர் இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார் .
தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் குறித்து உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி ஒன்றை வினவியது குறிப்பிடத்தக்கது .