
விண்வெளியில் சிறுகோள் ஒன்று மார்ச் 21 ஆம் தேதி பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும் கோள் இதுவே ஆகும்.
இந்த சிறுகோள் ஆனது பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் மார்ச் 21-ம் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் 2001 FO32 என்று பெயரிட்டுள்ளனர்.
பூமியை கடந்து செல்லும் சிறுகோள் (2001 FO32) அளவில் பெரியதாகவும், அபயாகரமானதாகவும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சிறுகோள் 2001 FO32-இன் சுற்றுப்பாதை நன்கு அறியப்பட்டதால் இது பூமியை பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
பூமியை கடந்து செல்லும் சிறுகோளை பற்றி குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.இது முழுமையாக பூமியை கடந்து செல்லும் தருணத்தில் மட்டுமே இக்கோளைப் பற்றி முழுமையான தகவல் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.