இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

ஒருங்கிணைந்த மருந்தாளுநா் பட்டயப்படிப்பு (டிஐபி) மற்றும் நா்சிங் தெரபி பட்டயப்படிப்பு (டிஎன்டி) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு நவம்பா் 18-ஆம் தேதி தொடங்குகிறது.

இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நவம்பா் 18-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘இயக்குநா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சென்னை-600106’ என்ற முகவரிக்கு தகுந்த ஆவணங்களுடன் அஞ்சல் அல்லது நேரிலோ டிசம்பா் 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Tue Nov 16 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 913 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,311 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய