ஆருத்ரா தரிசன விழா :சிதம்பரம் நடராஜர் கோவில் :டிச.21 இல் தொடங்குகிறது !!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறும் .உலக புகழ் பெற்ற வரலாற்றுமிக்க சிதம்பரம் நடராஜர் பெருமான் திருக்கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும் , மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் .

இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழா வருகிற டிச.21 தேதி வெகு விமர்சையாக தொடங்குகிறது .திங்கட்கிழமை (டிச .21) அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது .பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு பூஜைகளும் ,நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது .

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்தின் தொடர்ச்சியாக நடராஜர் வீதி உலாவும் ,செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22 ஆம் தேதி ) வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும் ,மற்றும் டிச .23 ஆம் தேதி சூரிய பிரபை வாகனத்திலும் ,வியாழக்கிழமை (டிச .24) அன்று சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும் ,டிச.25 ஆம் தேதி நடராஜர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் தெருவடைச்சானிலும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

26 ஆம் தேதி – வெள்ளி யானை வாகனத்திலும் ,27 ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் சுவாமி வீதி உலா வர இருக்கிறார் .இதனை தொடர்ந்து 28 ஆம் தேதி மாலை தங்க ரதத்தில் சுவாமி பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா வருகிறார் .

ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய விழாவாக தேர்த்திருவிழா 29 ஆம் தேதி வெகு விமர்சையாக நடக்க இருக்கிறது .தேர்திருவிழாவானது அதிகாலை 5.30 மணி அளவில் கோவில் சித்சபையில் இருந்து மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி நடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள இருக்கிறார் .

கோவில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு மகா அபிஷேகம் ஆனது டிச .30 ஆம் தேதி புதன்கிழமை நடக்கவிருக்கிறது .இதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் .டிச .31 ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும் .இறுதியாக தெப்ப உற்சவமானது ஜனவரி 1 ஆம் தேதி இரவு கோவிலின் தீர்த்த குளத்தில் நடைபெறுகிறது .

Next Post

விவோ X60 மற்றும் X60 ப்ரோ : வியப்பூட்டும் அம்சங்கள் ,தெறிக்கும் டிசைன்கள் !!

Tue Dec 15 , 2020
விவோ நிறுவனம் கான் அடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களாக விவோ எக்ஸ் 60 (VIVO X60) 5 ஜி மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ(VIVO X60 Pro) 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . விவோ X60 மற்றும் விவோ X60 ப்ரோ வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.இந்த இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் விரைவில் […]
vivo-x60-smartphone-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய